8 நாட்களுக்கு அள்ளிக் கொடுக்கும் திருப்பதி; மிஸ் பண்ணிடாதீங்க பக்தர்களே!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் பக்தர்களை மகிழ்விக்கும் வண்ணம் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை தேவஸ்தான நிர்வாகம் பயன்படுத்த தொடங்கியுள்ளது. முன்னதாக ஏழுமலையானுக்கு படைக்கப்படும் நெய்வேத்தியம் நாட்டு மாடுகளில் இருந்து பெறப்படும் பஞ்சகாவ்யா பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி பக்தர்களுக்கான பிரசாதங்கள் இயற்கை
முறையில் விளைந்த அரிசி, தானியங்கள், வெல்லம், நெய் உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவை மிகவும் ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் இருப்பதால் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் ஆரோக்கியமான உணவை பக்தர்களுக்கு வழங்கும் நோக்கில் நாட்டு மாடுகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட “சம்பிரதாய போஜனம்” என்ற உணவை பக்தர்களுக்கு தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
இதற்கான சோதனை ஓட்டம் கடந்த வியாழன் அன்று திருமலையில் உள்ள அன்னமையா பவனில் தொடங்கியது. காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் வழங்கப்படும் இந்த உணவானது, வரும் செப்டம்பர் 2ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு அளிக்கப்படவுள்ளது. காலை உணவில் இட்லி, உப்மா, குல்லகர், காலா பாத் உள்ளிட்டவை இடம்பெறும்.
மதிய உணவில் மில்லட்ஸ், புர்நாலு, தேங்காய் சாதம், புளி சாதம் உள்ளிட்ட 14 வகை உணவுகள் பரிமாறப்படும்.
இதனை ”அமிர்த போஜனம்” என்றும் அழைக்கின்றனர். இந்த போஜனத்தில் கலந்து கொண்டு பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி டாக்டர் கே.எஸ். ஜவகர் ரெட்டி, இயற்கை வழியிலான பல்வேறு வகையான உணவுப் பொருட்களை பரிமாறும் சிறப்பான திட்டத்தை தேவஸ்தானம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதில் இயற்கை முறையில் விளைந்த தானியங்கள், நாட்டு மாடுகளில் இருந்து பெறப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றை உண்பதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தற்போது உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கும் கொரோனாவிற்கு எதிராக இத்தகைய
இயற்கையான உணவு அவசியம் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். தன்னார்வலர்களின் உதவியுடன் இந்த திட்டம் சோதனை ஓட்ட முறையில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நிரந்தரமாக செயல்படுத்துவது பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
லாப நோக்கு அல்லாமல் அதேசமயம் தேவஸ்தானத்திற்கு கட்டுப்படியாகக் கூடிய வகையில் பக்தர்களுக்கு ’சம்பிரதாய போஜனம்’ வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதுதொடர்பாக இயற்கை விவசாயத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகையில், நாட்டு மாடுகள் மற்றும் இயற்கை முறையிலான விவசாய முறைகள் ஆகியவற்றின் பயன்பாடு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது.
No comments:
Post a Comment