வீட்டு உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு: அக்.,26க்குள் கண்டிப்பாக செய்ய வேண்டும்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

வீட்டு உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு: அக்.,26க்குள் கண்டிப்பாக செய்ய வேண்டும்!

வீட்டு உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு: அக்.,26க்குள் கண்டிப்பாக செய்ய வேண்டும்!

பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26ஆம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவரங்கள் காவல் நிலையங்களில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அந்தந்த பகுதி துணை ஆணையர்கள் அலுவலகங்களிலும், ஆணையர் அலுவலகத்தில் உளவுப்பிரிவில் இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள். வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் காவல் நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும்.



வாடகை தாரர்களின் பெயர், ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி போன்ற விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் பூர்த்தி செய்து, அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் அளிக்க வேண்டும். வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரிவிக்க வேண்டியதில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad