ஆகஸ்ட் 28: தமிழக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்!
தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1 ஆயிரத்து 551 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 872 பேர் ஆண்கள், 679 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 10 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 182 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment