பெட்ரோல் விலையை குறைத்து, பேருந்து கட்டணம் 3 ரூபாய் உயர்வு... திமுக அரசின் சூழ்ச்சி - சீமான்
தமிழகத்தில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைந்துள்ளதை பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இணைய வழி பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது பேசிய சீமான், பேருந்து கட்டணம் மூன்று ரூபாய் உயர்ந்துள்ளது அதை கவனித்தீர்களா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசியவர், பெட்ரோல் பயன்படுத்தும் வாகனத்தை வைத்திருப்பவர் ஓரளவிற்கு வசதி படைத்தவர்கள். ஆனால், ஒரு இடத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இடம் பெயர்க்கும் வாகனங்கள் டீசலில்தான் இயங்குகின்றன. ஆனால் டீசல் விலையை குறைக்கவில்லை. இரண்டிலும் ஒன்றரை ரூபாய் சமமாக குறைந்திருக்கலாம்.
தனியார் பேருந்து லாபத்தில் ஓடும்போது அரசு பேருந்து ஏன் நட்டத்தில் ஓடுகிறது? இதற்கு நிர்வாக முறையே காரணம். மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்பது தேவையற்றது. அங்கு கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டதால் லட்ச கணக்கில் பணத்தை கட்டி மாணவர்கள் படித்து
வருகிறார்கள்.
இங்கு பஸ் பாஸை இலவசமாக கொடுத்துவிட்டனர். கல்வியை அரசாங்கம் இலவசமாக கொடுத்தால் மாணவர்கள் காசு கொடுத்து பேருந்தில் பயணிப்பார்கள். இந்த நிர்வாக முறையே மக்களை ஏமாற்றுவதற்குத்தான்'' என இவ்வாறு சீமான் பேசினார்.தமிழகத்தில் அண்மையில் பேருந்து கட்டணம் விலை உயர்ந்துள்ளதாக பல குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், நாங்கள் அப்படி எதுவும் உயர்த்தவில்லை என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment