முதல்வருக்கு ரூ.2 கோடியில் கோயில் கட்டிய எம்.எல்.ஏ.! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

முதல்வருக்கு ரூ.2 கோடியில் கோயில் கட்டிய எம்.எல்.ஏ.!

முதல்வருக்கு ரூ.2 கோடியில் கோயில் கட்டிய எம்.எல்.ஏ.!

கடவுள்களுக்கு கோயில் கட்டியது போக, தற்போது சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்களுக்கு கோயில் கட்டும் வழக்கம் வந்து விட்டது. தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டப்பட்டது. அந்த வகையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அம்மாநில எம்.எல்.ஏ. மதுசூதனன் ரெட்டி என்பவர் கோயில் கட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் கட்டப்பட்டுள்ள அந்த கோயிலுக்கு நவரத்னலு நிலையம்வாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஜெகன் மோகன் ரெட்டியால் கொண்டு வரப்பட்டது நவரத்னலு திட்டம். அந்த திட்டம் உள்ளிட்ட மாநில அரசால் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக மதுசூதனன் கூறியுள்ளார்.

நவரத்னலு திட்டத்தால் மட்டும் மாநிலம் முழுவதும் சுமார் 5.65 கோடி பயனடைந்துள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி முன்மாதிரியாக திகழ்கிறார். அவரது தீவிர ஆதரவாளர் என்ற முறையில், அவரது நலன்சார்ந்த நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதே எனது முயற்சி என்றும் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

சுமார் ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த கோயிலை வடிவமைக்க தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கட்ட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோயிலின் உள்ளே ஜெகன் மோகன் ரெட்டியின் படங்கள் தங்கம் மற்றும் வெள்ளி சட்டங்களில் பதிக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலில் ஒன்பது தூண்கள் உள்ளன, ஒவ்வொன்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகப்படுத்திய நலத்திட்டங்களை சித்தரிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.



ஆந்திர அரசின் வளர்ச்சிப் பணிகளை முன்னிலைப்படுத்தும் வகையில் பிரசாதம் என்ற பெயரில் துண்டு பிரசுரங்கள் கோயில் வளாகத்தில் விநியோகிக்கப்படும். அரசு தொடர்பான புகார்களை அளிக்க கோயிலுனுள் உண்டியல் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மதுசூதனன் ரெட்டி, இந்த கோயில் ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக திகழும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad