தேடுதல் வேட்டையில் தலிபான்கள்: ஐ.நா., எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

தேடுதல் வேட்டையில் தலிபான்கள்: ஐ.நா., எச்சரிக்கை!

தேடுதல் வேட்டையில் தலிபான்கள்: ஐ.நா., எச்சரிக்கை!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தலிபான்களை அமெரிக்க தலைமையிலான படை விரட்டி அடித்தது. ஆனால், நேட்டோ படைகள் வெளியேறியதையடுத்து, தலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளனர். புதிய அரசை அமைக்கவும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முன்னதாக, தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, பெண்கள் பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை. பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கண்டிப்பாக புர்கா அணிய வேண்டும். ஆண் துணையில்லாமல் வீட்டை விட்டு செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட ஷரியத் சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி செய்து வந்தனர். இதனை மீறுபவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை விதிப்பது போன்ற செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

ஆனால், பெண்களின் உரிமைகள் ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு காக்கப்படும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தங்களுக்கு எந்த எதிரிகளும் தேவையில்லை என்று தெரிவித்துள்ள அவர்கள், பாதுகாப்பு படையினரின் முன்னாள் உறுப்பினர்களுக்கும், வெளிநாட்டு படைகளில் பணியாற்றியவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், இதுவரை எந்தவிதமான நடைமுறைகள் பின்படுத்தப்படும் என அவர்கள் தெளிவாக கூறவில்லை. புர்கா தேவையில்லை ஆனால் ஹிஜாப் அணிய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், புர்கா அணியாத பெண்களுக்கு அவர்கள் தண்டை அளித்ததாகவும், பெண் ஊழியர்களை பணியில் இருந்து அகற்றி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

தலிபான்கள் மாறிவிட்டனரா என்று கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இல்லை என்றே தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, சிலர் சுட்டுக் கொல்லப்பட்ட சில உதாரணங்களும் இதற்கு சாட்சியாக உள்ளன. ஜெர்மனி அரசுக்கு சொந்தமான ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு பத்திரிகையாளரைத் தேடிய தலிபான்கள் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், பலரை அவர்கள் வீடுவீடாக சென்று தேடி வருவதாகவும் பல செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad