அடுத்த 2 மாதங்களில் பெரிய ஆபத்து; வெளியான ஷாக் தகவல்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு ஏற்ற, இறக்கங்களுடன் பதிவாகி வருகிறது. மத்திய அரசு அளித்துள்ள புள்ளிவிவரங்களின் படி, நாட்டின் 41 மாவட்டங்களில் கொரோனா பாசிடிவ் விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான சூழல்
என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒருவாரத்தில் பதிவான புதிய பாதிப்புகளில் 58.4 சதவீதம் கேரளாவை சேர்ந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு ஏற்ற, இறக்கங்களுடன் பதிவாகி வருகிறது. மத்திய அரசு அளித்துள்ள புள்ளிவிவரங்களின் படி, நாட்டின் 41 மாவட்டங்களில் கொரோனா பாசிடிவ் விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான சூழல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒருவாரத்தில் பதிவான புதிய பாதிப்புகளில் 58.4 சதவீதம் கேரளாவை சேர்ந்தது.
தற்போது 3,38,705
பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் நேற்று 30,077 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி, நாட்டின் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்த பாதிப்பில் 1.03 சதவீதமாக உள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து குணமாகும்
விகிதம் 97.63 சதவீதமாக காணப்படுகிறது.
No comments:
Post a Comment