நியாய விலைக் கடைகளில் வேலைவாய்ப்பு; அமைச்சர் ஜாக்பாட் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

நியாய விலைக் கடைகளில் வேலைவாய்ப்பு; அமைச்சர் ஜாக்பாட் அறிவிப்பு!

நியாய விலைக் கடைகளில் வேலைவாய்ப்பு; அமைச்சர் ஜாக்பாட் அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்து பேசினார். அதாவது, கூட்டுறவுத்துறை மூலம் நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆட்சியர்கள் குழு

முதல்கட்டமாக டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 19 மாவட்டங்களில் 68 நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

கல்வி கட்டணம்

கூட்டுறவுத் துறையின் மூலம் பட்டுக்கோட்டை மற்றும் பர்கூரில் தொழிற்பயிற்சி கல்லூரிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இவற்றில் படித்து வரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று குறிப்பிட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் 20 ஏக்கர் நிலத்தில் 26 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பில் அமைக்கப்படும்.

காலிப் பணியிடங்கள்

இதற்காக 85 கோடி ரூபாய் உத்தேச மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 20 கோடி ரூபாயில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

நியாய விலைக் கடைகளில் 3,331 விற்பனையாளர்கள், 666 கட்டுநர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை 1988ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளை பின்பற்றியும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பணி நியமனம் செய்யப்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad