தமிழகத் தொழிலாளர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்; அரசின் உத்தரவால் பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

தமிழகத் தொழிலாளர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்; அரசின் உத்தரவால் பரபரப்பு!

தமிழகத் தொழிலாளர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்; அரசின் உத்தரவால் பரபரப்பு!

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் இருந்து கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன. கடந்த ஜூலை 25ஆம் தேதி 1,808 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் (ஆகஸ்ட் 25) 1,573 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையை பொறுத்தவரை கடந்த ஒரு மாதமாக 30க்கும் கீழ் பதிவாகி வருகிறது.

அச்சுறுத்தும் கேரளா

கொரோனா பாதிப்புகள் குறைந்து வருதால் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தமிழகத்தை கவலையடைச் செய்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 31,445 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 215 பேர் பலியாகி இருக்கின்றனர்.

நெகடிவ் சான்று (அ) தடுப்பூசி சான்று

தற்போது 1,70,312 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோர் 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட சான்று அல்லது கொரோனா நெகடிவ் சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இ-பாஸ் கட்டாயம்

இந்த சூழலில் குமுளி வழியாக கேரளாவிற்கு செல்லும் தமிழகத் தோட்டத் தொழிலாளர்கள் தடுப்பூசி சான்றுடன் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கேரளா செல்லும் தொழிலாளர்களின் வாகனங்கள் தமிழகப் பகுதியிலேயே நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்து அனுப்ப தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கம்பம்மெட்டு, குமுளி வழியாக கேரளா செல்லும் தமிழகத் தொழிலாளர்களின் வாகனங்கள், லோயர் கேம்ப், கம்பம்மெட்டு பகுதிகளில் தமிழக போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகின்றன. பின்னர் அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad