அறநிலையத் துறை சார்பில் வெயிட்டான அறிவிப்பு: தயாராகும் முதல்வர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

அறநிலையத் துறை சார்பில் வெயிட்டான அறிவிப்பு: தயாராகும் முதல்வர்!

அறநிலையத் துறை சார்பில் வெயிட்டான அறிவிப்பு: தயாராகும் முதல்வர்!

திருமண நாளில் கோயில்களின் முன்புறம் கூட்டம் கூடுவதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து அறநிலையத் துறைக்கு கீழ் கல்லூரிகள் செயல்படுவதை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

ஆய்வு முடித்த பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “ஏற்கனவே இந்த இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளி மூடப்பட்டதை தொடர்ந்து 600 க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் 57 பேர் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டது. எனவே முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பள்ளி நிர்வாகம் கொண்டுவரப்பட்டது. பள்ளியின் கட்டமைப்பு 100 ஆண்டுக்கு முந்தையதாகவும் , தினக்கூலி அடிப்படையில் உழைக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளே பயில்கின்றனர். பள்ளியில் சீரமைப்பு தொடர்பாக இன்று ஆய்வு நடத்தப்பட்டது. செப்டம்பர் 1ஆம் தேதி கொரோனா வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி இந்த பள்ளி செயல்பட தொடங்கும்.

கேரளாவுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் பாதிப்பு குறைந்துள்ளது. திருமண விழாக்களும் , கடவுள் வழிபாடும் இன்றியமையாத ஒன்றுதான். என்றாலும் பாதுகாப்பு நடைமுறைகள் அதைக்காட்டிலும் முக்கியம். கொரோனா மூன்றாம் அலை அச்சம் இருப்பதால் அபாய கட்டத்தை கடந்த பிறகு கோயில் திறப்பிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

கோயில்களின் வெளியில் நின்று திருமணம் செய்து கொள்வதென்பது உணர்வு சார்ந்தது. குறிப்பிட்ட சன்னிதானத்தில்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர்கள் முன்பே முடிவு செய்திருப்பர். கோயில்களின் முன்புறம் திருமண விழாக்களில் கூட்டம் கூடுவதை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



நான் சனிக்கிழமைதோறும் பார்த்தசாரதி கோயிலுக்கு செல்வேன் , பெரியபாளையம் , மாங்காடு கருமாரி அம்மன் கோயிலுக்கும் வாரம்தோறும் செல்வது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கோயிலுக்கு செல்லவில்லை. ஆடி மாத திருவிழாக்கள் பல கோயில்களில் இன்னும் முடியவில்லை. உடல் நிலை சரியில்லை என்றால் கசப்பு மருந்து எடுத்து கொள்வதைப் போலதான் கொரானா கட்டுப்பாடுகள்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் புதிய கல்லூரிகளை திறப்பது தொடர்பாக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்படும். கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது” என்று கூறினார்

No comments:

Post a Comment

Post Top Ad