குடும்ப அட்டைகள் வழங்குவதில் மாற்றம்..! இனி தகுதி உடையவர்களுக்கு மட்டும்...
தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் குடும்பை அட்டைகள், பொருட்களின் தரம் பற்றி பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். அப்போது அவர், பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 5 வகையான குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இதில் nphh எனப்படும் முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைகளை வசதியில்லாதவர்களுக்கும், முன்னுரிமை
கொண்ட குடும்ப அட்டைகளை வசதி படைத்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் வறுமையில் உள்ள மக்களும் பயன் அடையாமல் போய்விடுகின்றனர். இதனை உடனே மறுஆய்வு செய்து உரிய பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கான குடும்ப அட்டைகளை மாற்றி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அவற்றில் phs nphh என மொத்தம் 1 கோடியே 86 லட்சத்து 8 ஆயிரத்து 59 குடும்ப அட்டைகளும்,
வறுமையிலும் வறுமை (AAY) 18 லட்சத்து 63 ஆயிரத்துக்கு 77 குடும்ப அட்டைகளும்,
அன்னபூர்ணா (pds) 8491 குடும்ப அட்டைகளும், முதியோர் (oap) குடும்ப அட்டைகள் 4 லட்சத்து 1045 குடும்ப அட்டைகள் மற்றும் காவலர் குடும்ப அட்டைகள் (nphh) 59271 குடும்பை அட்டைகளும் உள்ளன.
nphh குடும்ப அட்டை தாரர்களில் வசதி படைத்தவர்களும், வறுமையில் இருப்பவர்களும் உள்ளனர். இது குறித்து ஏற்கனவே முதலமைச்சர்
ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் இந்த பிரச்சினை தொடர்பாக மறு ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தரமான அரிசியை வழங்கும் பொருட்டு அரிசி ஆலைகளில் ஆகஸ்ட் 31 க்குள் தரம் பிரிக்கும் இயந்திரத்தை நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்
No comments:
Post a Comment