இனி ஒர்க் ஃப்ரம் ஹோம்தான்: கர்நாடக அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

இனி ஒர்க் ஃப்ரம் ஹோம்தான்: கர்நாடக அரசு அறிவிப்பு!

இனி ஒர்க் ஃப்ரம் ஹோம்தான்: கர்நாடக அரசு அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்றும் அதன்காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கமும் மக்களின் வாழ்க்கை முறையையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறது.
இதனால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது, பெரும் பின்னடைவைச் சந்தித்தது. தற்போது மக்கள் அதிலிருந்து மெல்ல மீண்டு வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழில்நுட்பம் புதிய வழிகளையும் காட்டியது.

தனியார் மற்றும் அரசு ஊழியர்களும் ஒர்க் ஃப்ரம் ஹோம் முறைப்படி வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்தனர். இணைய வழியில் கூட்டங்கள் நடத்துவது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இதனால் பெரும் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் மீண்டும் அலுவலகங்களை நோக்கி படையெடுக்கின்றனர்

ஆனால் கர்நாடக அரசோ அங்குள்ள ஐடி நிறுவனங்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையை அடுத்த ஆண்டு (2022) இறுதி வரை தொடர வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேசமயம் இதற்கு காரணம் கொரோனா அல்ல.

இதுகுறித்து ஐடி நிறுவனங்களின் தேசிய சங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “சென்ட்ரல் சில்க் போர்டு முதல் கேஆர்புரம் வரையிலான அவுட்டர் ரிங் சாலையில், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளை பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க உள்ளது.

இச்சாலையில் தான், பல தொழில்நுட்ப பூங்காக்கள், ஐடி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க கோவிட் காலத்தைப் போல், 2022ஆம் ஆண்டு டிசம்பர் வரை, வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை ஐடி நிறுவனங்கள் நீட்டிக்க வேண்டும்” எனத் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad