பள்ளிகள் திறப்பில் புதிய தகவல்; அரசு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

பள்ளிகள் திறப்பில் புதிய தகவல்; அரசு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பள்ளிகள் திறப்பில் புதிய தகவல்; அரசு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தலைநகர் டெல்லியில் கடந்த 9ஆம் தேதியில் இருந்து பள்ளிகளை திறக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. முதல்கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் புரோஜக்ட் வேலைகளுக்கு பள்ளிகளுக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர். பெரும்பாலான பள்ளிகளை புரோஜக்ட் பணிகளை நிறைவு செய்வதற்காக 12ஆம் வகுப்பு மாணவர்களை மட்டும் அழைத்துள்ளன. குறுகிய நேர செயல்பாடுகளுக்காக 10ஆம் வகுப்பு மாணவர்களை வரவழைத்து வருகின்றன. இந்நிலையில் டெல்லி அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழு அளித்துள்ள பரிந்துரைகளின்படி,

பள்ளிகள் தயார்

மேல்நிலை வகுப்புகளில் இருந்து படிப்படியாக பள்ளிகளை திறக்க தயாராக இருப்பதாக பல்வேறு பள்ளி நிர்வாகங்களும் தெரிவித்துள்ளன. அஹ்லான் பள்ளிகளின் இயக்குநர் அசோக் பாண்டே கூறுகையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிராக்டிகல்ஸ் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டும் வருகை புரிகின்றனர்.

பெற்றோர்கள் சம்மதம்

அடுத்தகட்டமாக பள்ளிகளை திறப்பதற்கு மாநில அரசு அனுமதி அளித்தால், அதற்கான தகுந்த சூழல் குறித்து ஆய்வு செய்யப்படும். பெற்றோர்களின் சம்மதத்துடன் மாணவர்களை வரவழைக்க திட்டமிடப்படும். முன்னதாக 30-40 சதவீத பெற்றோர்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்தனர். ஆனால் தற்போது பெற்றோர்கள் பலரும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க விரும்புவதாக குறிப்பிட்டார்.

முதலில் தடுப்பூசி வரட்டும்

செக்டர் 8 ரோகினியில் உள்ள அரசு சர்வோதயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஏ.கே.ஷா பேசுகையில், வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படியொரு உத்தரவு வந்தால், காலை 8-11 மணிவரை 10ஆம் வகுப்பிற்கும், நண்பகல் 12-2 மணி வரை 12ஆம் வகுப்பிற்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறினார்

No comments:

Post a Comment

Post Top Ad