ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய கேரளா; இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய கேரளா; இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல!

ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய கேரளா; இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல!

இந்தியாவில் நேற்று புதிதாக 46,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது முந்தைய நாளை விட 8,541 அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. கடந்த ஜூலை 7ஆம் தேதிக்கு பின்னர் முதல்முறை தினசரி தொற்று 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கேரள மாநிலம் ஆகும். ஓணம் பண்டிகையை ஒட்டிய தளர்வுகள் மற்றும் பண்டிகை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குறைவான பரிசோதனைகள் ஆகியவையே எதிர்பார்க்காத அளவு கொரோனா பாதிப்பை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் உச்சம்

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,445 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. கடைசியாக மே 22ஆம் தேதி 30 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இந்த சூழலில் சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் மீண்டும் உச்சம் தொட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி பரிசோதனைகளின் 7 நாட்கள் சராசரி 1.68 லட்சமாக இருந்தது.

கேரள கொரோனா நிலவரம்

பின்னர் ஆகஸ்ட் 10ஆம் தேதி 1.47 லட்சமாகவும், ஆகஸ்ட் 24ஆம் தேதி 1.09 லட்சமாகவும் குறைந்து கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்தது. மேலும் கேரள மாநிலத்தின் கொரோனா பாசிடிவ் விகிதத்தை பொறுத்தவரை ஜூலை மாதத்தின் பெரும்பாலான நாட்கள் 11 சதவீதத்திற்கும் கீழ் இருந்த நிலையில், ஜூலை 21ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மூன்றாவது அலை எச்சரிக்கை

தற்போது 17.3 சதவீதமாக காணப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளில் 68 சதவீதம் கேரளாவின் பங்கு என்று பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு 5 நாட்களுக்கு பிறகு சற்றே உயர்ந்து 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 1,000 மேல் புதிய பாதிப்புகளை பதிவு செய்த மாநிலங்களாக ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவை இருக்கின்றன. கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்ற மாநிலங்களையும் பாதிக்கும் என்பதால் மத்திய அரசு மிகுந்த கவலை கொண்டுள்ளது. மூன்றாவது அலையின் தொடக்கமாக அமைந்துவிடுமோ என்ற எண்ணத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க அறிவுறுத்தி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad