ஆகஸ்ட் 30: தமிழகத்தில் இன்றைக்கு கொரோனா நிலவரம் எப்படி இருக்கு?
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,13,360 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில்
தற்போது 17,085 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 183 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 5,43,968 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 5,33,743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8,398
பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் இன்று 188 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,35,903 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 231598 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,263
பேர் பலியாகியுள்ளனர்.
செங்கல்பட்டில் இன்று 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 165295 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 161750 பேர்
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2431
பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,50,368 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,12,74,782 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இன்று 1,739 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,61,376 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 34,899 ஆக உயர்ந்துள்ளது
No comments:
Post a Comment