பாமகவால் வந்த தோல்வி: குட்டையை குழப்பும் மாஜி அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

பாமகவால் வந்த தோல்வி: குட்டையை குழப்பும் மாஜி அமைச்சர்!

 பாமகவால் வந்த தோல்வி: குட்டையை குழப்பும் மாஜி அமைச்சர்!

தேர்தலுக்குப் பின்னர் தோல்வியடைந்த கட்சிகள் தங்களது இந்த நிலைக்கு காரணம் என யாரையாவது கை காட்டுவார்கள், அவற்றில் பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளை நோக்கிதான் இருக்கும். அடுத்த தேர்தலுக்குள் சமாதானமாகிவிடலாம் என்கிற நோக்கில் வார்த்தைகளை கொட்டி விடுவார்கள்.
அதிமுக தலைமையோ இம்முறை அப்படி கூட்டணிக் கட்சிகளை குற்றம் சாட்டவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளதால் இதற்காகவே அமைதிகாக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. கூட்டணிக் கட்சிகளைப் பற்றி பேசும் தங்களது கட்சியைச் சேர்ந்தவர்களையும் அடக்கி வைத்துள்ளனர்.
இந்த சூழலில் முன்னாள் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பாமக குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கான அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று வேலூர் நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கமலக்கண்ணன் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் அதிமுக துணை கொறடா ரவி, வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad