மகேந்திரன்: வாழ்த்து தெரிவிச்சதுக்கு வறுத்தெடுத்த உடன்பிறப்புகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

மகேந்திரன்: வாழ்த்து தெரிவிச்சதுக்கு வறுத்தெடுத்த உடன்பிறப்புகள்!

மகேந்திரன்: வாழ்த்து தெரிவிச்சதுக்கு வறுத்தெடுத்த உடன்பிறப்புகள்!

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அண்மையில் திமுகவில் இணைந்தார் மகேந்திரன். கோவை மாவட்டத்தில் திமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாத நிலையில் மகேந்திரனின் வருகை முக்கியமாக பார்க்கப்பட்டது.
“என் மூஞ்சிலேயே திராவிடம் தெரியும், எப்போதும் திராவிட சித்தாந்தம் தான்” என திமுகவில் சேர்ந்த போது மகேந்திரன் செய்தியாளர்களிடையே பேசினார்.

கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு திமுக சார்பில் வாழ்த்து தெரிவிப்பதில்லை. ஆனால் மகேந்திரனோ பெரியார், அண்ணா, கலைஞர் புகைப்படங்களையும் உதய சூரியன் சின்னத்தையும் போட்டு, “அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் அன்பும், மகிழ்ச்சியும் பெருகிட இந்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் வாழ்த்தி வணங்குகிறேன்" என புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதற்கு ஒரு பக்கம் வரவேற்பு அளித்தாலும் திமுக உடன்பிறப்புகள், அபிமானிகள் மகேந்திரன் பதிவுக்கு எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

“சார் உங்களுக்கு நம்பிக்கை இருந்தா உங்க வீட்லயே கும்புடுங்க இப்படி பொது தளத்துல போட்டு திராவிட இயக்கத்த அசிங்க படுத்தாதிங்க” என்று பதிவிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad