பள்ளிகள் திறப்பு: பயப்படாதீங்க, அமைச்சர் கொடுக்கும் நம்பிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

பள்ளிகள் திறப்பு: பயப்படாதீங்க, அமைச்சர் கொடுக்கும் நம்பிக்கை!

பள்ளிகள் திறப்பு: பயப்படாதீங்க, அமைச்சர் கொடுக்கும் நம்பிக்கை!

தமிழ்நாட்டில் பல மாதங்களுக்குப் பின்னர் நாளை 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளியில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை சார்பில் நெறிமுறைகள் வெளியிட்டுள்ளோம். மேலும் பள்ளிகளில் எடுக்கவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்து பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது முகக் கவசம் அணிந்து வர வேண்டும். ஒருவேளை முகக்கவசம் கிழிந்து விட்டால் மாற்று முகக்கவசம் வழங்கும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் முகக்கவசம் வைத்திருப்பதற்கு அறிவுறுத்தி உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.



“பள்ளி வகுப்பறைகள் கிருமிநாசினி கொண்டு கட்டாயம் சுத்தப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பள்ளிகளில் முறையாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே நடைபெறும். மேலும் தற்போதைக்கு பள்ளிகளில் விளையாட்டு நேரம் கிடையாது.

No comments:

Post a Comment

Post Top Ad