படிச்சவுங்களுக்கே வேலை இல்லை, எதுக்கு புதிய இன்ஜீனியரிங் காலேஜ்? அமைச்சரே சொல்லிட்டார்!
அதிமுக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், ஆலங்குளத்தில் கலைக்கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று பேரவையில் வினாக்கள் விடைகள்
நேரத்தின்போது கோரிக்கை வைத்தார்
தற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் புதிதாக 13 கலைக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வெறும் 4 கல்லூரிகள் அமைப்பதற்கான இடங்கள் மட்டுமே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு கலைக்கல்லூரிகளில் ஆலங்குளத்தில் ஒரு கலைக் கல்லூரி அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளத்தில்
புதிதாக கலைக் கல்லூரி அமைப்பதற்காக 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே விரைவில் தமிழ்நாட்டில் 4 புதிய கலை கல்லூரிகள் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படும்” என்று கூறினார்.
கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்த போது, “பொறியியல் கல்லூரிகள் அதிகம் துவங்குவதற்கான சூழல் தற்போது தமிழ்நாட்டில் இல்லை. மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ளதாலும், பொறியியல் பயின்ற மாணவர்களுக்கு வேலை இல்லாத நிலை உள்ளதாலும் புதிய கல்லூரிகள் அமைக்க தேவையில்லை.
No comments:
Post a Comment