'அன்பு மகனை இழந்து தவிப்பு' : முதல்வர் ஸ்டாலின் வேதனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

'அன்பு மகனை இழந்து தவிப்பு' : முதல்வர் ஸ்டாலின் வேதனை!

 'அன்பு மகனை இழந்து தவிப்பு' : முதல்வர் ஸ்டாலின் வேதனை!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான பிரகாஷின் மகன் கருணா சாகர் (24) சென்ற ஆடி கார் விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம் கோரமங்களா பகுதியில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் எம்.எல்.ஏ.வின் மகன் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் பெங்களூர் செய்ன்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு காரணம் கார் அதி வேகமாக இயக்கப்பட்டதே என முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும், இது தொடர்பாக மேலதிக விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் மகன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரகாஷ் மகன் கருணா சாகர் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்தது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், கோர விபத்துக்கு தன் அன்ப ு மகனைப் பறிகொடுத்திருக்கும் கழக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷிற்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அன்பு மகனை இழந்து தவிக்கும் அவருக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad