இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே..! ஆன்லைன் கேம் பிரியர்களுக்கு அரசு செக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே..! ஆன்லைன் கேம் பிரியர்களுக்கு அரசு செக்!

இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே..! ஆன்லைன் கேம் பிரியர்களுக்கு அரசு செக்!

சீனாவில், 18 வயதிற்குட்பட்டவர்கள் வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் கேம் விளையாட முடியும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இன்றைய நவீன காலக் கட்டத்தில், உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது கைகளிலும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் உள்ளன. பெரும்பாலானோரின் பொழுது போக்கு பூங்காவாக இருப்பது இணையதளங்கள் தான். குழந்தைகள் அதிகளவில் ஆன்லைன் மொபைல் கேம்களில் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர்.

தற்போதைய சூழலில் குழந்தைகள் முதல் ஒரு குறிப்பிட்ட வயது வரை உள்ள இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் இதனை தடுக்கும் வண்ணம் அண்டைை நாடான சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நாளை முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாரத்தில் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்று அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

சீனாவில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக நேரங்களை செலவிடுவதாகவும், குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் அதிகமான நேரத்தை ஆன்லைனில் விளையாட்டில் செலவிடுவதாகவும் அந்நாட்டு அரசுக்கு அறிக்கை மூலம் புகார் வந்தது. அதை கட்டுப்படுத்தவே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வீடியோ கேம்ஸ் நிறுவனமான நிக்கேய் ஆசியா அளித்த தகவலில், நாட்டில் இருக்கும் அனைத்து ஆன்லைன் வீடியோ கேம்ஸ் பயனாளர்களின் உண்மையான விவரங்களை சீன அரசு சமர்ப்பிக்க வலியுறுத்தி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வித் துறையிலும் சில மாறுதல்களை கொண்டு வர சீன அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பீஜிங்கில் வெளிநாட்டு கல்வி சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு சீன அதிபர் ஜின்பிங்கின் சோசலிசம் கருத்துக்களை முதன்மையாக ஆரம்பப் பள்ளிகள் , உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதை கற்றுக்கொடுக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad