தலிபான் தலைவருடன் இந்திய தூதர் திடீர் சந்திப்பு! - இருவரும் பேசியது என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

தலிபான் தலைவருடன் இந்திய தூதர் திடீர் சந்திப்பு! - இருவரும் பேசியது என்ன?

தலிபான் தலைவருடன் இந்திய தூதர் திடீர் சந்திப்பு! - இருவரும் பேசியது என்ன?

கத்தார் தலைநகர் தோஹாவில், தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரை, கத்தார் நாட்டிற்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல் சந்தித்து பேசினார்.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இன்றுடன் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறின.

இந்நிலையில், கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில், தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாயை, கத்தார் நாட்டிற்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல் சந்தித்து பேசினார். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தோஹாவில், தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாயை, கத்தார் நாட்டிற்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இந்திய தூதரகத்தில் நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு, ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானை பயன்படுத்தி, இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைகளிலும் தலிபான்கள் ஈடுபடக் கூடாது என்றும், குறிப்பாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் இந்தியத் தூதர் தீபக் மிட்டல் வலியுறுத்தினார். இதற்கு உரிய முறையில் ஒத்துழைப்பு அளிப்பதாக தலிபான் அரசியல் பிரவு தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad