ஆப்கனில் இருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர் யார்?
அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர், அல்கொய்தா மற்றும் அதன் தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அமெரிக்க படைகள் ஆப்கனில் களமிறங்கின. ஒசாமா பின்லேடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டாலும், ஆப்கனில் தொடர்ந்து அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டு வந்தனர்.
இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது. அதனைத்தொடர்ந்து,
தலிபான்கள் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தினர். இறுதியாக தலைநகர் காபூலையும் அவர்கள் கைபற்றினர். புதிய அரசை அவர்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், ஆப்கனில் இருந்து பலரும் வெளியேறி வந்தனர். காபூல் விமான நிலையத்தை கட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து வெளியேறுவோருக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியுடன் அமெரிக்க படைகள் முற்றிலும் ஆப்கனில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
இந்திய நேரப்படி இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு 12.59 மணிக்கு அமெரிக்காவின் கடைசி விமானம் ஆபன் மண்ணில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனால், தலிபான்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க விமான புறப்பட்டு சென்றபோது வானை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சில நாட்களுக்கு முன்னர் காபூல்
விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் சிலர் உயிரிழந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி, அமெரிக்கா ஆப்கனில் இருந்து வெளியேறியுள்ளது.
அமெரிக்க வீரர்கள் காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறி விட்டனர். எங்கள் நாடு முழு சுதந்திரம் பெற்றுள்ளது. கடைசி ஐந்து விமானங்கள் கிளம்பிவிட்டன. அமெரிக்காவின் கடைசி காலடியும் இங்கிருந்து புறப்பட்டுவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். “அமெரிக்காவின் மிக நீண்ட போரை முடிவுக்குக்
கொண்டு வந்திருக்கிறோம். காபூல் விமான நிலையத்தில் இருந்து EDT நேரப்படி பிற்பகல் 3:29 மணிக்கு கடைசி விமானங்கள் புறப்பட்டன” என்று அமெரிக்க மத்திய ஆசிய பிரிவின் ராணுவத் தலைவரான ஜெனரல் பிராங்க் மெக்கன்சி வாஷிங்டனில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment