ஒரே ஆண்டில் 6 லட்சமாக உயர்வு: வேலைக்காக காத்திருப்போர் பட்டியல்!
மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வேல
ை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு வேலை பெற விரும்புவோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் அரசு வேலைக்கான பணி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா போன்ற சூழல் காரணமாக அண்மைக்காலங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. வேலையின்மை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் விவரங்களை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 7030345 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, மாற்றுத்திறனாளிகள் 137077 பேர் வேலைக்காக
பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி வேலைக்காக காத்திருந்தவர்களின் எண்ணிக்கை 64 லட்சத்து 12 ஆயிரத்து 327 ஆக இருந்த நிலையில், நடப்பாண்டு ஜுலை மாத நிலவரப்படி இந்த எண்ணிக்கை 70 லட்சத்து 30 ஆயிரத்து 345ஆக உயர்ந்துள்ளது. ஆண்கள் 3293401 பேரும், பெண்கள் 3736687 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 257 பேரும் வேலைவாய்ப்புக்காக அரசு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment