மாணவிகள் 12 பேருக்கு கொரோனா: மீண்டும் மூடப்படும் தமிழக கல்லூரிகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

மாணவிகள் 12 பேருக்கு கொரோனா: மீண்டும் மூடப்படும் தமிழக கல்லூரிகள்!

மாணவிகள் 12 பேருக்கு கொரோனா: மீண்டும் மூடப்படும் தமிழக கல்லூரிகள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், கடந்த முறை
ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளை திறந்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 16ஆம் தேதி முதல் அக்கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டுவரும் அரசு செவிலியர் கல்லூரியில் பயிலும் 3ஆம் ஆண்டு மாணவிகள், அரசு மருத்துவமனைக்குப் பயிற்சிப் பணிக்கு சென்ற போது, மாணவி ஒருவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவர் உள்பட, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 12 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், செவிலியர் மாணவிகள் 176 பேரும் விடுதியிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்லூரிகள் தொடங்கி 2 நாட்கள் ஆகும் நிலையில் மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



முன்னதாக, கடந்த ஊரடங்கு அறிவிப்பின்போது, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. முதல்வருடன் 20ஆம் தேதி மீண்டும் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், மாணவர்களின் நலன் கருதி கல்லூரிகளை மீண்டும் மூட வேண்டும் என்றும், தற்போதைக்கு பள்ளிகளை திறக்கவும் கூடாது என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்குமா என்பதை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள், கொரோனா பரவல் தொடர்பாக, நாளை நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னரே தெரிய வரும்.

No comments:

Post a Comment

Post Top Ad