பள்ளிகள் திறப்பு: அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறை!
கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு உள்ளன.
இரண்டாவது அலை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லுாரிகள் கடந்த 16ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம்
வகுப்பு வரை பள்ளிகளை திறக்க, அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 20) அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, சுகாதார துணை இயக்குனர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், “ * பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேன்டீன், கழிப்பறைகள், வகுப்பறைகள், நுாலகம் என, அனைத்து பகுதிகளும் கிருமி நாசினியால் சுத்தம் செய்திருக்க வேண்டும்
* அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி, கை கழுவ தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை, பள்ளி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்
No comments:
Post a Comment