முன்விரோதத்தினால் கொலை, சென்னையில் பெண் உட்பட 6 பேர் கைது..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

முன்விரோதத்தினால் கொலை, சென்னையில் பெண் உட்பட 6 பேர் கைது..!

முன்விரோதத்தினால் கொலை, சென்னையில் பெண் உட்பட 6 பேர் கைது..!

சென்னை, டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (51). இவர் கடந்த 18ம் தேதியன்று மாலை, அண்ணாநகர், 6வது அவென்யூ, M பிளாக் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சம்பத்தை சில மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
மேற்படி சம்பவம் குறித்து சம்பத்குமாரின் மகன் கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், K-4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புகாரை டுத்து K-4 அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1) விநாயகம் (வ/47), கற்பகம் (பெ/41), 3) மோகனவேல் (எ) பிளாக்பரி (வ/21), 4) நவீன்குமார் (வ/24), 5) ஹரிகுமார் (எ) டோக்கா (வ/21), 6) ஶ்ரீதரன் (எ) ஜங்குபார் (வ/25), ஆகிய 6 நபர்களை கைது செய்தனர்.

விசாரணையில் மேற்கண்ட அனைவரும் சம்பத்குமாரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த 2 கத்திகளை கைப்பற்றிய போலீசார் கொலை வழக்கை பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad