தமிழ்நாட்டுல 80% பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்புதானாம்... அதிகாரி அதிர்ச்சி தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

தமிழ்நாட்டுல 80% பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்புதானாம்... அதிகாரி அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டுல 80% பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்புதானாம்... அதிகாரி அதிர்ச்சி தகவல்!

சென்னை நந்தனம் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை அமைச்சர் பொன்முடி மற்றும் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது:

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 3,06,74,681 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி, பள்ளிகள் திறக்கப்படுவதால் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் கூடும் விழாக்களில் random sample எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தொடர்ந்து 13 மாவட்டங்களில் கொரோனா தொற்று சரியில்லாமல் ஏற்றத் தாழ்வுகளுடனே உள்ளன. அந்த மாவட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

Genome Lab சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்கள் சோதனை முறையில் கொரோனா மரபியல் ஆய்வு மையம் செயல்பட உள்ளது. ஒரு வார காலம் இந்த சோதனையானது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பொதுமக்கள் எந்த வகையான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை கண்டறிய, பரிசோதனை மாதிரிகளை பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.



அப்படி அனுப்பி வைக்கப்பட்ட 2, 693 மாதிரிகளின் முடிவுகள் தற்போது வந்துள்ளன. அவற்றில் 2, 150 மாதிரிகள் டெல்டா வேரியட் வகை கொரோனா வைரஸால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முடிவுகள் வந்துள்ளன.

அதாவது .தமிழகத்தில் அண்மையில் தொற்றுக்கு ஆளானோரில் 80% பேர் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. சமீபத்தில் வந்த 222 பரிசோதனை முடிவுகளும் இதனையை உணர்த்தும்படி அமைந்துள்ளது.

தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் இருப்பு இல்லாது போடப்பட்டு வருகிறது. கூடுதலான தடுப்பூசி ஒதுக்கினால் மட்டுமே தேசிய சராசரிக்கு இணையான அளவில் தடுப்பூசி செலுத்த முடியும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் அவர்களது பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.



கல்லூரி முதலாண்டு பயிலும் மாணவர்கள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் தொடர்ந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

கேரளா மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படுகிறது. வரும் நாட்களில் பல்வேறு மதப் பண்டிகைகள் வருவதால் மக்கள் அடுத்த பத்து நாட்களுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad