அன்புமணி ஆகிய நான்: மறுபடியும் முதல்ல இருந்தா? எடப்பாடி அதிர்ச்சி!
அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமிய
ே முன்னிலை வகித்தார். தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அவருக்கு நெருக்கமானவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தினாலும் எடப்பாடி பழனிசாமியின் கருத்துகளே அதிமுகவின் கருத்தாக முன்வைக்கப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் வாய்ஸ் எதிரொலிக்கவில்லை.
கூட்டணியில் எந்தக் கட்சி இருக்கிறதோ இல்லையோ பாமகவை விட்டுவிடக்கூடாது என்பதில் இபிஎஸ் உறுதியாக இருந்தார். பாமகவும் இதை பயன்படுத்திக் கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட
ஒதுக்கீட்டில் 10.5 சதவீதத்தை உள் இட ஒதுக்கீடாக பெற்றுக்கொண்டது. இதற்கு பிற சமூக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் அதை நிறைவேற்றுவதில் எடப்பாடி உறுதியாக இருந்தார்.
பாமகவோடு அமைச்சர்கள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். தைலாபுரம் தோட்டத்துக்கு ஓடியே அமைச்சர்கள் தவித்துப்போயினர். பாமகவுக்காகவே தேமுதிகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டனர் என்றும் ஒரு பேச்சு அப்போதே எழுந்தது. ஏன் ஒரு கட்சிக்கு மட்டும் அதிமுக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்றால் அதற்கும் எடப்பாடியை நோக்கியே கைகாட்டினர். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் கவுண்டர் சமூக வாக்குகளைப் போல் வன்னியர் வாக்குகளும் கணிசமாக உள்ளன. பாமக ஒருவேளை அணி மாறி திமுக பக்கம் சென்றுவிட்டால் தனது வெற்றியே பாதிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டுள்ளார். அதனாலே பாமக இழுத்த இழுப்புக்கெல்லாம் அதிமுக சென்றதாக கூறினார்கள்.
No comments:
Post a Comment