அதிமுகவிற்கு அடுத்த ஷாக்; ஸ்டாலின் போட்ட பக்கா ஸ்கெட்ச்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 16, 2021

அதிமுகவிற்கு அடுத்த ஷாக்; ஸ்டாலின் போட்ட பக்கா ஸ்கெட்ச்!

அதிமுகவிற்கு அடுத்த ஷாக்; ஸ்டாலின் போட்ட பக்கா ஸ்கெட்ச்!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று 100 நாட்களைக் கடந்துவிட்டது. மிக முக்கியமான நலத்திட்டங்களை நெருக்கடியாக காலகட்டத்தில் செயல்படுத்தி தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். இந்நிலையில் கலைஞர் கருணாநிதி வழியிலான திராவிட ஆட்சி, தங்கள் அரசுக்கு காத்திருக்கும் சவால்கள், எதிர்க்கட்சிகளின் பொய்ப் பரப்புரை, மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து “தி டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
முதல்வராக பதவியேற்ற தருணம் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்று நான் சொன்னது 150 ஆண்டுகால வரலாற்றைச் சொல்லும். திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்து தமிழ்நாடே கொண்டாடும் ஒரு மாபெரும் தலைவரைத் தந்தவர் முத்துவேலர். நினைத்ததும் பாடல் எழுதும் கவிஞராக இருந்தார். அவருக்கு பிறந்த பிள்ளை தான் முத்தமிழஞர் கலைஞர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து தனக்காக இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான தலைவராக உயர்ந்தார். இந்த மாபெரும் வரலாற்றின் தொடர்ச்சி தான் நான் என்று கூறினார்.
100 நாட்களில் எத்தனை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, தமிழக மக்களின் வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் கொரோனா இரண்டாம் அலையின் பெரும் தாக்கத்தை கட்டுப்படுத்தியிருக்கிறோம். இதற்காக 4,000 ரூபாயை இரண்டு தவணையாக வழங்கியுள்ளோம். வாக்குறுதி அளிக்காமலேயே அத்தியாவசியமான 13 பொருட்கள் அடங்கிய தரமான மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மக்கள் தந்த கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள், துறை வாரியாக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அதிமுகவினர் தங்கள் ஆட்சி கால ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகளை மக்கள் கவனத்திலிருந்து மறைக்க போடும் வெற்றுக் கூப்பாடு இது. எங்கள் ஆட்சியின் சாதனைகளை மக்கள் கவனிக்கிறார்கள். பாராட்டுகிறார்கள். ஊழல் செய்த அதிமுகவினரை சட்டம் நன்றாகவே கவனித்துக் கொள்ளும். அதிமுக ஆட்சியாளர்களின் ஊழல் செயல்பாடுகள் மீதான சட்டப்படி நடவடிக்கைகளையே திமுக அரசு மேற்கொள்கிறது. தணிக்கை அறிக்கை தொடங்கி, ஆதாரங்கள் கொண்ட பலவித ஊழல் புகார்களின் அடிப்படையில் நேர்மையான நடவடிக்கைகள் தொடரும். சட்டம் அதன் கடமையை சரியாகவே செய்யும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad