பள்ளிகளைத் திறக்க இது கட்டாயம்; தமிழக அரசின் புதிய உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

பள்ளிகளைத் திறக்க இது கட்டாயம்; தமிழக அரசின் புதிய உத்தரவு!

பள்ளிகளைத் திறக்க இது கட்டாயம்; தமிழக அரசின் புதிய உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு பல மாதங்களாக மூடிக் கிடக்கும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் முழுமையான கற்றல் கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பள்ளிகளை திறக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் வெளியிட்டனர்.

பள்ளிகள் திறக்க அனுமதி

அதன்படி, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஒரேநேரத்தில் 50 சதவீத மாணவர்கள் என்ற வகையில் சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைப்பது,

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பள்ளிகள் திறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பே கால அட்டவணையை வெளியிடுதல், பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை நேற்றைய தினம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்களது தடுப்பூசி சான்றை வரும் 27ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

முதல் 45 நாட்களுக்கு

பள்ளியை சுத்தம் செய்யும் பணியை வரும் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 45 நாட்கள் மாணவர்களுக்கு புத்தாக்க வகுப்புகளை நடத்த வேண்டும். ஆன்லைனில் நடத்திய அலகுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தி மாணவர்களிடம் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு மாணவர்கள்,

பெற்றோர்கள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.அருமைநாதன் கூறுகையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு ஏற்றவாறு தனித்தனி வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும். ஏனெனில் இரண்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் முற்றிலும் வேறானவை. இந்த விஷயத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad