கையை காட்டிய ஸ்டாலின்: அமைச்சர்கள் கப்சிப், அதிமுகவினர் ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

கையை காட்டிய ஸ்டாலின்: அமைச்சர்கள் கப்சிப், அதிமுகவினர் ஷாக்!

கையை காட்டிய ஸ்டாலின்: அமைச்சர்கள் கப்சிப், அதிமுகவினர் ஷாக்!

சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைத்துவிட்டால் பிற கட்சிகளை குறிப்பாக எதிர்கட்சிகளை அவ்வளவு எளிதாக பேச அனுமதித்துவிடமாட்டார்கள். கூச்சல்களுக்கிடையே போராடிதான் பேசுவார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அதிமுக ஆட்சி வரை இதுதான் நிலைமை. உதாரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில், மானிய கோரிக்கையின் போது திமுக எம்எல்ஏக்கள் விவாதத்தைத் தொடங்கும்போது, பெஞ்சைத் தட்டி சத்தம் போட்டுப் பேசுவதை மறிப்பார்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள். இதை சம்பந்தப்பட்ட அமைச்சரும் கண்டுகொள்ளமாட்டார். இதனால் தங்களது கருத்தை பதிவு செய்ய முடியாத கோபத்தில் திமுக பலமுறை வெளிநடப்பு செய்தது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் எதிர்கட்சிகளை அரவணைத்து செல்கிறார் என்ற பாராட்டுகளை பிற கட்சிக்காரர்களிடமிருந்தே கேட்க முடிகிறது. இதை நிரூபிக்கும் வகையில் நேற்று சட்டசபையில் ஒரு சம்பவம் நடைபெற்றது.


நேற்று (ஆகஸ்ட் 24) ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கை நடைபெற்றது. இதில் இரு துறைகளுக்கும் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் பெரியகருப்பன் பேசி எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.

சட்டமன்றம் கூடுவதற்கு முன்பாகவே அமைச்சர்களுக்கும் திமுக எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஒரு உத்தரவு போட்டிருந்தார். “சட்டமன்றத்தில் எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது, நீங்கள் யாரும் கூச்சல் குழப்பம் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்குத் தெளிவான பதில் கொடுக்கவேண்டும்”என்பதுதான் அந்த உத்தரவு.

ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியத்தின் மீதான விவாதத்தில், திமுக எம்எல்ஏக்கள் உட்பட 8 எம்எல்ஏக்கள் பேசினார்கள். அதில் அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சருமான வேலுமணி பேசும்போது, “எங்கள் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்படுகிறது. அம்மா உணவகங்கள் தொடரவேண்டும், கோவையில் பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன” என்று பேசும்போது, அமைச்சர் நேரு குறுக்கிட்டு பேசத் தொடங்கியதும், முதல்வர் ஸ்டாலின் தனது கை அசைவால் உட்காரச் சொன்னார். உடனே அமைச்சர் நேருவும் முடிவில் சரியான பதில் தருகிறேன் என்று அமர்ந்துவிட்டார்.

சிறிது நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து, “எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது, அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசவேண்டாம். அவர்களை முழுமையாக பேசவிடுங்கள். கடைசியாக விளக்கம் சொல்லுங்கள்” என்றபோது, அதிமுக எம்எல்ஏக்களே திகைத்துப் போய்விட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad