ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறுத்திவைப்பு; ரயில் பயணிகள் அதிர்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறுத்திவைப்பு; ரயில் பயணிகள் அதிர்ச்சி!

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறுத்திவைப்பு; ரயில் பயணிகள் அதிர்ச்சி!

இந்தியாவில் ரயில் பயணத்திற்கான டிக்கெட்கள் விற்பனையை ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதில் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் விவரங்களை டெல்லி, மும்பை, கொலத்தா, சென்னை ஆகிய நான்கு கட்டுப்பாட்டு மையங்கள் மூலமாக நிர்வகித்து வருகின்றது. தெற்கு ரயில்வே, தென்மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களுக்கான டிக்கெட் கட்டுப்பாட்டு மையம்

தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை மூர்மார்க்கெட் கட்டிடத்தின் 7வது மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் அதே கட்டிடத்தின் 2வது மாடிக்கு விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்

ரயில் டிக்கெட் கட்டுப்பாட்டு மையம் இடமாற்றம் காரணமாக வரும் 27ஆம் தேதி அதிகாலை 12.15 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே மண்டலங்களில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் தெற்கு ரயில்வே மற்றும் தென்மேற்கு ரயில்வே மண்டலங்களில் மட்டும் பார்சல் மற்றும்

முன்பதிவில்லா டிக்கெட்கள்

ஓய்வு அறைகள் முன்பதிவுகள் மேற்குறிப்பிட்ட நேரங்களில் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாக சாதாரண டிக்கெட்களை மட்டும் பெற்றுக் கொள்ளலாம். முன்பதிவில்லா டிக்கெட் விற்பனையும் தொடர்ந்து நடைபெறும்.

இதேபோல் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, தென்மத்திய ரயில்வே மண்டலங்களில் இரவு 11.45 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கவுண்ட்டர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு நடைபெறாது. அதேசமயம் முன்பதிவில்லாத டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad