கலைஞரின் அன்பைப் பெற்றவர்: ஸ்டாலின் வாழ்த்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

கலைஞரின் அன்பைப் பெற்றவர்: ஸ்டாலின் வாழ்த்து!

கலைஞரின் அன்பைப் பெற்றவர்: ஸ்டாலின் வாழ்த்து!

சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவ ை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தஞ்சையை சார்ந்த இல.கணேசன்(76), தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தவர். பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக உள்ளார்.

இந்த நிலையில், மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு முதல்வர் ஸ்டாஅலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான இல.கணேசனுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.மேலும், தொலைபேசி வாயிலாகவும் இல.கணேசனை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டதாகவும் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad