லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த குறி யார் மீது, எப்போது?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீதான விசாரணை வேகமெடுத்த நிலையில் கடந்த சில நாள்களாக பெரியளவில் சம்பவங்கள் நடைபெறவில்லை.
எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகிய அமைச்சர்களைத் தொடர்ந்து எந்த மாஜி அமைச்சர் வீட்டுக்கு
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு
செல்லும் என யூகங்கள் கிளம்பி வந்தன. ஆனால் எதிர்பாராத ட்விஸ்டாக மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து கொடநாடு விவகாரம் கிளம்பிவிட்டது. அதிலிருந்து எடப்பாடி தூக்கத்தை தொலைத்து தவித்து வருகிறாராம்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த அட்டாக் யார் மீது என விசாரித்தால் முக்கிய தகவல்கள் வெளிவருகின்றன. “பல மாஜிக்கள் மீதான புகாரில் ஆதாரங்களை சேகரித்து அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் சேர்த்து
மறைமுகமாக பின் தொடர்ந்து வருகிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர். தமிழ்நாடு முழுக்க களமிறங்கியுள்ளனர். தலைமையிடமிருந்து சிக்னல் வந்து இன்னார் வீட்டுக்கு செல்லுங்கள் என்றால் மறு கணமே செல்ல தயாராக இருக்கின்றனர்” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
No comments:
Post a Comment