தமிழக மக்களுக்கு ஷாக்; சுகாதாரத்துறை செயலாளர் பரபரப்பு தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

தமிழக மக்களுக்கு ஷாக்; சுகாதாரத்துறை செயலாளர் பரபரப்பு தகவல்!

தமிழக மக்களுக்கு ஷாக்; சுகாதாரத்துறை செயலாளர் பரபரப்பு தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் நேற்று திடீரென ஏற்றம் கண்டுள்ளது. புதிதாக 1,551 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், முந்தைய தினத்தை விட எண்ணிக்கையில் 9 அதிகம் ஆகும். கடைசியாக ஆகஸ்ட் 11ஆம் தேதி தினசரி பாதிப்பு முந்தைய நாளை விட 71 உயர்ந்திருந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 100க்கும் அதிகமாக கொரோனா பதிவாகியுள்ளது.

கொரோனா நிலவரம்

13 மாவட்டங்களில் நோய்த்தொற்று ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. இந்த சூழலில் மீண்டும் தினசரி தொற்று அதிகரித்தது சற்றே கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கான தடுப்பூசி முகாமில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

டெல்டா பிளஸ் அச்சம்

அப்போது பேசுகையில், தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை 3,417 மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் 2,633 மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளன. இதில் 80 சதவீதம் (2,150) டெல்டா வகை கொரோனா தொற்று என்று தெரியவந்துள்ளது. இந்த 2,150ல் 12 மாதிரிகள் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று என கண்டறியப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கடைசியாக அனுப்பிய 222 மாதிரிகளுமே டெல்டா வகை கொரோனா தொற்று என முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் கண்டறியப்பட்டவை அனைத்தும் டெல்டா வகை கொரோனா தொற்றாக உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். அனைத்து வகை கொரோனா பாதிப்பிற்கு ஒரேமாதிரியான சிகிச்சை முறை தான்.

இந்த விஷயத்தில் கூட்டம் கூடுவதையும், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகள ை முறையாக பின்பற்ற வேண்டும். அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான மரபணு ஆய்வகம் தமிழகத்தில் அமையவுள்ளது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad