அடுத்த ஆண்டு முதல்; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சூப்பர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

அடுத்த ஆண்டு முதல்; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சூப்பர் அறிவிப்பு!

அடுத்த ஆண்டு முதல்; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சூப்பர் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதையடுத்து துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பெட்ரோல் விலை குறைப்பு

இன்றைய கூட்டத்தொடரில் பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பால் மக்கள் நேரடியாக பயன் அடைந்துள்ளனர். ஆகஸ்ட் 1 முதல் 13 வரை சராசரியாக ஒருநாள் பெட்ரோல் விற்பனை 9,180 கிலோ லிட்டராக இருந்தது. 14 முதல் 17 வரையிலான 4 நாட்களில் ஒரு நாளில் 10,317 கிலோ லிட்டர் விற்பனையாகியுள்ளது.

மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், திடீரென பள்ளிக்கு செல்வதால் மாணவர்களுக்கு ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். கற்றுக் கொள்வதிலும் சிரமம் உண்டாகும். தற்போது குழந்தை திருமணங்கள், குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் நடப்பு நிதியாண்டில் மாணவர்களை ஊக்குவிக்க 200 கோடி ரூபாயில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.

க.அன்பழகன் பெயர் சூட்டுதல்

அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கம் தரும் வகையில் மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக சமர்ப்பிக்கப்படவில்லை. உடனடியாக அவை மறு சீரமைப்பு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார். சென்னை நந்தனத்தில் உள்ள நிதித்துறை கட்டடத்திற்கு பேராசிரியர் க.அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad