திமுக அரசின் சதி வேலைகள்; பகீர் கிளப்பிய எதிர்க்கட்சி தலைவர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

திமுக அரசின் சதி வேலைகள்; பகீர் கிளப்பிய எதிர்க்கட்சி தலைவர்!

திமுக அரசின் சதி வேலைகள்; பகீர் கிளப்பிய எதிர்க்கட்சி தலைவர்!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போது ஆளுங்கட்சி அனைத்து துறைகளிலும் தோல்வியுற்று அமைச்சர்கள் தங்களது பாக்கெட்டை நிரப்புவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அரசு அதனை மறைப்பதற்காக எதிர்க்கட்சியினர் மீது பொய்யான வழக்குகளை போட்டு வருகின்றனர். அவர்களுடன் முதன்மையான பணி ஊழல், அரசியல் செய்தல், பழிவாங்குதல் ஆகியவையே ஆகும். திமுகவின் 100 நாட்கள் சாதனை என்பது வசூல் செய்தது தான்.

திமுக அரசின் சாதனை

மேலும் அரசு உயர் ஊழியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பணியிடமாற்றம் செய்தது தான் சாதனை. இந்த 100 நாட்களில் தமிழக மக்கள் வேதனையும், சோதனையும் தான் அடைந்திருக்கின்றனர். மக்கள் நலத்திட்டங்களை முடக்கி வைத்திருக்கின்றனர். மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. இதையும் முடக்கி வைத்துள்ளனர். ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட திட்டத்திற்கு நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு கிடைத்து வந்த வேலைவாய்ப்பையும் தடுத்துவிட்டனர்.

அதிமுகவினர் மீது பொய் புகார்

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் தயார் செய்து அவற்றை ஆளுநரிடம் அளித்தனர். அந்த வழக்குகளை விரைவாக முடிக்க தற்போதைய திமுக அரசு முடுக்கி விட்டுள்ளது. மக்களை திசை திருப்பும் முயற்சியாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தியுள்ளனர். அதுவும் பொய்யான வழக்குகளை போட்டு.

கொடநாடு கொலை வழக்கு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த சூழலில் அந்த வழக்கில் புதிதாக விசாரணை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதாக சொல்கிறார். அதற்கும் வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. அது சட்டரீதியாக நடைபெற்று வரும் விஷயம். இந்த வழக்கில் சிக்கியவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad