அதிமுக வெளியேற்றமா; உண்மையில் என்ன நடந்தது? அரசின் விளக்கம்!
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேச்சு எழுந்தது. அப்போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டமன்ற வளாகத்தில்
பதாகைகளுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடநாடு விஷயத்தில் பழிவாங்கும் போக்குடன் திமுக அரசு செயல்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம்சாட்டினர்.
பத்திரிகை செய்தி
இந்நிலையில் இன்றைய கூட்ட நேரத்தில் பேசிய அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம் என சில பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அவர்களாக வெளியேறியதை நாங்கள் வெளியேற்றியதாக செய்தி
வெளியிட்டுள்ளனர். இத்தகைய செய்திகளில் பத்திரிகைகள் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். பின்னர் பேசிய சபாநாயகர்
அப்பாவு, நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் உரிய அனுமதி பெறாமல் ஒரு பிரச்சினையை எழுப்ப முயன்றார்கள்.
சபாநாயகர் அப்பாவு விளக்கம்
அப்போதே சொன்னேன். என்னிடம் அனுமதி பெறவில்லை. தவறான நடைமுறை. கடந்த காலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகளைப் பார்த்தேன். அப்போதும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் என்ற காரணத்தால் அவருக்கு வாய்ப்பினை வழங்கினேன். முதல்வர் அவர்கள் ஜனநாயக முறையில் இந்த அவை நடைபெற வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்.
என்னுடைய அரசல்ல. எனது அரசல்ல. நமது அரசு.
அதிமுக வெளிநடப்பு
எல்லோரும் சேர்ந்து மக்கள் நலத்திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த பேரவை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் உடன், இழந்த பெருமைகளை மீட்டெடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே மக்களுக்கான பிரச்சினைகளை பேசுபவர் என்று நினைத்து நான் அனுமதித்தேன். எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது பின்னால் இருந்த உறுப்பினர்கள் பதாகைகளை காண்பித்தனர்.
No comments:
Post a Comment