பள்ளிகள் திறக்க ஏற்பாடு; தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

பள்ளிகள் திறக்க ஏற்பாடு; தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவு!

பள்ளிகள் திறக்க ஏற்பாடு; தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவு!


தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி, ஊராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8ஆம் வகுப்புகள் வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து வகை ஆசிரியர்கள்/ மாணவர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது.

EMIS பதிவேற்றம்

இதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டிற்கான (2021-22) ஊராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து வகை ஆசிரியர்கள்/ மாணவர்கள் பணியிட நிர்ணயம் சார்பான பணிகள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) மூலமாக மேற்கொள்ளப்படவிருக்கிறது. எனவே இந்தப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (EMIS) இணையதளத்தில் மேற்படி பள்ளிகள் சார்ந்த கீழ்க்குறிப்பிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வகுப்பு வாரியாக & மொழி வாரியாக

1 - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து ஊராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி, மாணவர்களின் எண்ணிக்கையினை வகுப்பு வாரியாகவும் மற்றும் தமிழ் வழி/ ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

2 - இரு மொழி, மும்மொழி என சிறுபான்மை மொழிப் பள்ளிகளுக்கு தனியாக விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

3 - 2,381 அங்கன்வாடி மையங்களுக்கு எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களையும்/ பணியிடங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.



முழு விவரங்களும் வேண்டும்

4 - ஒவ்வொரு ஊராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்துவகை ஆசிரியர்கள் பணியிடங்களின் விவரங்களை பள்ளியின் அளவை பதிவேட்டின் படி ஒப்பிட்டு சரிபார்த்து பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டிருந்தால் அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகக் கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad