அதிமுக எடுத்த பரபரப்பான முடிவு; அனல் பறக்கும் தமிழக அரசியல்!
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து சட்டமன்றத்தில்
பேச்சு எழுந்தது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் கூச்சல், குழப்பம், அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று ஏற்கனவே தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.
அரசியல் தலையீடு இல்லை
அதன் அடிப்படையில்
முறைப்படி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் தலையீடோ, பழிவாங்கும் எண்ணமோ நிச்சமாக இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு வழக்கு முடியும் நிலையில் திமுக அரசு வேண்டுமென்றே சயனுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது.
அதிமுக கண்டனம்
அதில், என்னையும், அதிமுக பொறுப்பாளர்கள் சிலரையும் சேர்த்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதனை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக அரசு வேண்டுமென்றே அதிமுக தலைவர்கள் மீது வழக்கு போட்டு அச்சுறுத்தி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது, அவதூறு செய்தியை பரப்ப பொய் வழக்கை ஜோடிக்கின்றனர்.
No comments:
Post a Comment