வெளியாகும் கடும் கட்டுப்பாடுகள்? தமிழகத்தில் ஊரடங்கு குறித்து முதல்வர் ஆலோசனை..!
தமிழகத்தில் கொரோனா
தொற்றின் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு புதிதாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. அப்போதைய நிலவரப்படி நாளொன்றுக்கு 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பாதிப்பு படிப்படியாக குறைந்து இன்று 2 ஆயிரத்துக்கும் கீழே சரிந்துள்ளது.
இந்த நிலையில் நோய் தோற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒரே மாதிரியான தளர்வுகள் அமலில் உள்ளன. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பு, தியேட்டர்கள்
திறப்பு உள்ளிட்ட சில செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு ஆகஸ்டு 23ம் தேதியோடு முடியவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளை காலை ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இந்த ஆலோசனையில் கூடுதல் தளர்வுகளை அறிவிக்க முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை
திறக்க அதிகாரபூர்வ அறிவிப்பை அரசு வெளியிடலாம். அதே சமயம், மூன்றாவது அலையைக் கருத்தில்கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
முன்னதாக பள்ளிகளை திறப்பதற்கான அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்:
சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்.
அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர், சோப் கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை. வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment