மத அடிப்படைவாதத்தை எப்போதும் எதிர்ப்போம்: திருமா உறுதி!
திருமாவளவனின் 59ஆவது பிறந்த நாள் அவரது கட்சி நிர்வாகிகளாலும் தொண்டர்களாலும் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அம்பேத்கருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து திருமாவளவனை வரவேற்றனர் அதன் தொடர்ச்சியாக கேக் வெட்டி தனது பிறந்த நாளை திருமாவளவன் கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “கொள்கைக் குன்றாக
நின்று ஒரு திராவிட சிறுத்தையாக பணியாற்றி கொண்டிருக்கிறார் திருமாவளவன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்மை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதாகவும் அவருக்கு தம் நெஞ்சார்ந்த நன்றி” எனக் கூறினார்.
அதேபோல், நல்லக்கண்ணு, முத்தரசன், வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் மற்றும் ராஜகண்ணப்ப்பன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களும் தமக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர்களுக்கும் நன்றி என தெரிவித்தார்.
ஆகஸ்ட் 17ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு சமூகநீதி சமூகங்களுக்கான ஒற்றுமை என்னும் முழக்கத்தை கோட்பாடாகக் கொண்டு கருத்தியல் பிரச்சாரம் பரப்பப்படும் என திருமாவளவன் கூறினார்.
எஸ்சி,எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சமூகங்களை பிளவு பட்டுக்துகிற மறைமுக செயல் திட்டத்தோடு பாஜக-சங்பரிவார்
அமைப்புகள் செயல்படுகின்றன என குற்றம் சாட்டினார். இட ஒதுக்கீட்டை அழித்தொழிக்க வேண்டும், சமூக நீதியை அழித்தொழிக்க வேண்டும் என்பது அவர்களின் மறைமுக செயல் திட்டங்களில் ஒன்று. ஆகவே எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்து அதை தடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறோம் என கூறினார்.
No comments:
Post a Comment