இல.கணேசன் ராஜினாமா: பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

இல.கணேசன் ராஜினாமா: பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகல்!

இல.கணேசன் ராஜினாமா: பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகல்!

சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தஞ்சையை சார்ந்த இல.கணேசன்(76), தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தவர். பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக உள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராக இவர் பொறுப்பு வகித்ததற்கு முன்னர் அக்கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசன், தமிழக மாநில தலைவர் கே அண்ணாமலையை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad