தமிழகத்தில் பாஜக ஆட்சி: அண்ணாமலை சொன்ன ஐடியா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

தமிழகத்தில் பாஜக ஆட்சி: அண்ணாமலை சொன்ன ஐடியா!

தமிழகத்தில் பாஜக ஆட்சி: அண்ணாமலை சொன்ன ஐடியா!

தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும். எப்படியாவது தாமரையை மலரச் செய்தே தீர வேண்டும் என்று முனைப்பு காட்டி வரும் பாஜக, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் பயணித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக - பாஜக கூட்டணிக்குள் சலசலப்புகள் ஏற்பட்டாலும், கூட்டணி இறுதி செய்யப்பட்டு தேர்தலில் களம் கண்டது. ஆனால், தேர்தல் தோல்விக்கு பின்னர் பாஜக கூட்டணி குறித்து அதிமுக தலைவர்கள் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடைபெறாத 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இது தொடர்பாக அடுத்தடுத்த கூட்டங்களையும் அவர்கள் நடத்தி வருகின்றன.

பாஜகவை பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும் இது தொடர்பாக அக்கட்சியினர் விவாதித்துள்ளனர். இந்த நிலையில், பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக

அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர் தலைமையில் பாஜக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தலுக்குத் தயாராவது குறித்து பாஜக மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் அண்ணமலை தலைமையில், சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில், கட்சியின் வளர்ச்சி பணிகள், அடுத்தக் கட்ட திட்டமிடல், உள்ளாட்சித் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்ற கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என்று தொடர்ச்சியாக ஓய்வின்றி பணி செய்ததை போல, உள்ளாட்சி தேர்தலிலும் அதே வேகத்தோடு உழைக்க வேண்டும். தொடர்ந்து உழைத்தால், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்றும் அப்போது அவர் யோசனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad