விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு; செயல்படுத்திக் காட்டுமா தமிழக அரசு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு; செயல்படுத்திக் காட்டுமா தமிழக அரசு?

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு; செயல்படுத்திக் காட்டுமா தமிழக அரசு?

எஸ்.டி.பி.ஐ கட்சியின் விவசாய அணி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பினால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாக்க தமிழக அரசால் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டு சுமார் ரூ.2,327 கோடி ஒதுக்கீட்டில் 37 மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பில் நெற்பயிர் இடம்பெறவில்லை. மாறாக நெற்பயிர் சாகுபடியால் இழப்பீடு ஏற்ப்பட்டால் மாநில பேரிடர் நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையில் ஒன்றிய அரசு தனது பங்கைக் குறைத்துவிட்டதாலும், மாநில அரசின் நிதிச்சுமை காரணமாகவும், நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் முன்வராததாலும் நெற்பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் பெரும் அதிர்ச்சியையும், ஏற்படுத்தியுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பால் தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி செய்து அரசின் காப்பீட்டு திட்ட அறிவிப்பிற்காக நம்பிக்கையோடு காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். சம்பா நெற்பயிர்களில், இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு மகசூல் இழப்பு உருவானால், இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விடுமே என்ற கவலையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.

இயற்கை இடர்பாடுகள் எல்லா ஆண்டுகளும் ஏற்படுவதில்லை. எனினும், திடீரென ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாகவே பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பேரிடர் ஏற்படும்போது மட்டும் விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டியதிருக்கும். மற்றபடி விவசாயிகளிடமிருந்து பெறப்படும் ப்ரீமியம் காப்பீட்டு நிறுவனத்துக்கு வருவாயாகவே அமைகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad