கலைஞருக்கு நினைவிடம் அமைக்க இத்தனை கோடி: இப்போது அவசியமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

கலைஞருக்கு நினைவிடம் அமைக்க இத்தனை கோடி: இப்போது அவசியமா?

கலைஞருக்கு நினைவிடம் அமைக்க இத்தனை கோடி: இப்போது அவசியமா?

சமூக வலைதளங்களில் கே.டி.ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரம், பதவி, செல்வாக்கை பயன்படுத்திக்கொண்டு பெண்களுக்கு பாலியல் கொடுமை அளிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன. சினிமா, அரசியல், விளையாட்டு மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்த கொடிய வைரஸ் பரவி உள்ளது.

பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவருக்கு வீடியோ கால் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. ராகவன் இது போன்று தொடர்ந்து பல பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், தனது பண பலம், ஆள் பலம், டெல்லி லாபி ஆகியவற்றை பயன்படுத்தி மிரட்டுவதாகவும் கூறுகின்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அனுமதியின் பேரில்தான் இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறியுள்ளனர் மதன் டைரி யூ டியூப் பக்கத்தினர். அந்த பெண்ணுக்கு நீதி வேண்டும் என்றால் வீடியோவை வெளியிடுங்கள் என்று அண்ணாமலை கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். இதேபோல் பாஜகவில் உள்ள பல தலைவர்களின் வீடியோக்களும் இனி வரும் நாள்களில் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.



வீடியோ வெளியாகி சில மணி நேரத்தில் கே.டி.ராகவன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்...எனனை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்.. .நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைதளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்... என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு. அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்” என்று கே.டி.ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அருவருக்கத்தக்க செயல்கள் அடங்கிய அந்த வீடியோ ஒருபுறமிருக்க இந்த வீடியோ வெளியான பின்னணி குறித்தும் முக்கிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கட்சி என்றால் கோஷ்டிகள் இருப்பது சாதாரணம் தான். இன்றைக்கு தேதியில் தமிழகத்தில் உள்ள கட்சிகளில் கோஷ்டி அரசியல் தூக்கலாக இருப்பது பாஜக தான் என அடித்துச் சொல்கிறார்கள். ஒவ்வொரு ஏரியா வாரியாக தங்களுக்கான கோஷ்டிகளை வளர்த்து வருகிறார்கள், அதனால் தான் கட்சி வளரவில்லை என அக்கட்சி அபிமானிகளே கூறுவதை கேட்க முடிகிறது.

மேலும் அவர்களிடம் விசாரிக்கும் போது பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். “பாஜக தலைவராக எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்ட போதே அதை கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு வழியாக அவருக்கு இணை அமைச்சர் என்ற ஒரு கேட் பாஸ் கொடுத்து அனுப்பிய பிறகு இந்த முறை தலைவர் நான் தான் என ஒவ்வொருவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவர, கட்சிக்குள் நுழைந்து, ஏன் அரசியலுக்கே வந்து ஒரு ஆண்டுகூட ஆகாத அண்ணாமலை தலைவராக கொண்டுவரப்பட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad