தந்தை இல்லாத நேரத்தில் இதை செய்துள்ளேன்: ஓபிஎஸ் ருசீகர தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

தந்தை இல்லாத நேரத்தில் இதை செய்துள்ளேன்: ஓபிஎஸ் ருசீகர தகவல்!

தந்தை இல்லாத நேரத்தில் இதை செய்துள்ளேன்: ஓபிஎஸ் ருசீகர தகவல்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று அவை தொடங்கியதும் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நவீன விளக்கப்படங்களுடன் காமராஜர் சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என விதி எண் 110இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 110 விதியின் கீழ் திமுக அரசின் முதல் அறிவிப்பாக இதன ை வெளியிட்ட ஸ்டாலின், 70 ஆண்டுகள் திரைத்துறை, 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகள் கட்சியின் தலைவராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி என்று புகழாரம் சூடினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கலைஞர் நினைவிடம் குறித்த அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். இந்த அறிவிப்பை முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம் என்றார்.
என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், “எனது தந்தையின் பெட்டியில் மனோகரா பராசக்தி கதைகள் இருக்கும். அவற்றை அவர் மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் அதனை எடுத்து நாங்கள் படித்துள்ளோம்” என்றும் தெரிவித்தார்.
50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. பல்வேறு சிறப்பு மிக்க சட்டங்களை கொண்டு வந்தவர். சமுதாயத்தை சீர் திருத்தும் கருத்துக்கள் அடங்கியதுதான் கலைஞர் எழுத்துக்களால் உருவான பராசக்தி படம் என்றும் அப்போது ஓபிஎஸ் புகழாரம் சூடினார்.

No comments:

Post a Comment

Post Top Ad