மெட்ரோ ரயில் திட்டம் எப்போ? - கோவைக்காக சபையில் குரல் கொடுத்த எஸ்பி வேலுமணி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

மெட்ரோ ரயில் திட்டம் எப்போ? - கோவைக்காக சபையில் குரல் கொடுத்த எஸ்பி வேலுமணி!

மெட்ரோ ரயில் திட்டம் எப்போ? - கோவைக்காக சபையில் குரல் கொடுத்த எஸ்பி வேலுமணி!

அதிமுக ஆட்சியில் கோவை மெட்ரோ திட்டம் ரயில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேரவையிலும் குறிப்பிட்டிருந்தார், அதற்கு முதல்வரும் பதிலளித்திருந்தார். அந்த பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்

அத்திக்கடவு -அவினாசி முதல் திட்டத்தில் விடுப்பட்ட பகுதிகளை இரண்டாம் பேஸில் இணைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் -

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் தோண்டியதால் சாலைகள் பழுதடைந்துள்ளன என்பதை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் -

அம்மாவின் ஆட்சி காலத்தில் புதிதாக ஐம்பதாயிரம் சாலைகள் அமைக்கப்பட்டன. மத்திய அரசின் அதிகமான விருதுகளை உள்ளாட்சித் துறை சார்பில் பெற்றிருக்கிறோம்.

தமிழகத்தில் 658 அம்மா உணவகங்கள் உள்ளன. இவற்றுக்கு 2020-21 அதிமுக ஆட்சியில் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சபையில் குரல் கொடுத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad