அடேங்கப்பா... 10 வருஷத்துல இவ்வளவு தடுப்பணைகளா?... அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

அடேங்கப்பா... 10 வருஷத்துல இவ்வளவு தடுப்பணைகளா?... அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!

அடேங்கப்பா... 10 வருஷத்துல இவ்வளவு தடுப்பணைகளா?... அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!

சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மீதான மானிய கோரிக்கையின்போது அமைச்சர் துரைமுருகன் பதிலுரை அளித்தார்.

அப்போது பேசிய அவர், "அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் எந்த பகுதியில் தடுப்பணை வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கலாம்.

அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் 190 தடுப்பணை, 6 கதவணை, 12 அணைகட்டுகள் உட்பட கடைமடை வரை ஆறுகள் சீரமைக்கப்படும்.

மேட்டூர், அமராவதி, வைகையாறு, ராமநதி ஆகியவற்றின் கொள்ளவை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமரின் நீர்பாசன திட்டத்தின்படி 23 மாவட்டங்களில் 200 குளங்கள் புணரமைக்கப்படும்

31 மாவட்டங்களில் 207 ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் மற்றும் அவற்றின் கட்டுமானங்கள் நபார்ட ு நிதியுதவியுடன் படிப்படியாக மேற்கொள்ளப்படும். புதிய பெரிய 7 நீர்பாசன திட்டங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 50 குறு நீர்பாசன குளங்கள் தரம் உயர்த்தப்படும். திருவண்ணாமலை, விழுப்புரம் தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 8 புதிய கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புயல் மற்றும் பெருமழை காலங்களில் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை களையும் பொருட்டு திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் சென்னை மாவட்டங்களில் 16 தூண்டில் வளைவு மற்றும் கதவணை, கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் அமைக்கப்படும்", என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை அமைசச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad